காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்னையில் முக்கிய திருப்பமாக, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார். மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட காவிரி தொடர்பான விவகாரங்களை இரு முதல்வர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்க உள்ளனர்.
இந்த சந்திப்பு இரு மாநிலங்களுக்கும் இடையிலான நீர் பங்கீடு பிரச்னையில் புதிய உரையாடலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகதாது அணைத் திட்டம் கர்நாடக அரசு நீண்டகாலமாக முன்னெடுத்து வரும் ஒன்று. காவிரி ஆற்றின் மேல் பகுதியில் இந்த சமன் பாத்திர அணையை கட்டுவதன் மூலம் குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்கு உதவும் என கர்நாடகம் வாதிடுகிறது.

ஆனால் தமிழ்நாடு இந்தத் திட்டத்தை உறுதியாக எதிர்க்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி விருதை மீறிய செயல் என தமிழ்நாடு கருதுகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டுக்கு காவிரியில் கிடைக்கும் நீர் அளவைக் குறைக்கும் என்பதும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதும் தமிழ்நாட்டின் முக்கிய கவலை.
இதையும் படிங்க: சென்னை நீட் போராட்டத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான கோஷங்கள்?! தவெக - இ.கம்யூ. கூட்டணியில் சலசலப்பு?
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேட்டு?! கச்சிதமாய் காய் நகர்த்தும் திமுக! கூட்டணியை முறித்ததால் ஆத்திரம்?