கரூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றம் தரப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. சிபிஐ விசாரணை தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் கூறி தமிழக வெற்றி கழகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், தமிழக அரசின் தரப்பிலும், தமிழக வெற்றி கழகத்தின் தரப்பிலும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

விஜய் தப்பி செல்லவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழுவில் தமிழக அரசின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதால் சரியான முடிவு தெரிய வராது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. முறையான பாதுகாப்பு வழங்கியதாகவும் தமிழக அரசின் தரப்பில் பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு மீது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: எப்படி ஒரே இரவில் பிரேத பரிசோதனை நடந்தது? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி...!
அப்போது உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கடுமையாக சாடியதுடன் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தது. காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: கரூர் மக்களுக்கு விஜய் மேல எந்த கோபமும் இல்ல.. அத அவங்களே சொல்லிட்டாங்க..!! அருண்ராஜ் தகவல்..!