கரூரில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குளித்தலையில் நடைபெற்ற மண்டல பொறுப்பாளர்கள் உடன ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி பேசினார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவது குறித்து மண்டல பெறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளரும் கரூர் எம்எல்ஏ வுமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
குளித்தலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் கேசவன், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிங்க: லண்டனில் முதல்வர் வணங்கிய திருவள்ளுவர் நெற்றியில் விபூதி! வைரலாகும் புகைப்படம்...
கரூரில் வரும் செப்டம்பர் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கழக முன்னோடிகள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்விழாவில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர்,பாவேந்தர், முதலமைச்சர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஒவ்வொரு தொகுதி வாரியாகவும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, கரூர், கிருஷ்ணராயபுரம் அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 50,000 பேர் விதம் கரூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பொறுப்பாளர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவினை வரலாற்று சாதனையாக மாற்றிவிட வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தகராணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, குளித்தலை நகராட்சி சேர்மன் சகுந்தலா, ஒன்றிய செயலாளர்கள் சூரியனூர் சந்திரன், பொய்யாமணி தியாகராஜன், அண்ணாதுரை, கதிரவன், கரிகாலன் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிலிண்டருக்கு ரூ.100 மானியம்! சொன்னிங்களே செஞ்சீங்களா ஸ்டாலின்... நயினார் சரமாரி கேள்வி