தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் வந்தது LATE… சோறு, தண்ணி இல்லாம காத்திருந்தாங்க… பொறுப்பு DGP வெங்கட்ராமன் விளக்கம்…!
தங்களது உறவுகளை இழந்த மக்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. வேலுச்சாமிபுரத்தில் மரண ஓலம் கேட்கிறது. கரூரில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி துடிக்கின்றனர். செய்வதறியாமல் கலங்கி போய் நிற்கும் உறவினர்களின் நிலை மனதை உலுக்குகிறது.
இதையும் படிங்க: ஹாஸ்பிட்டலில் பச்சிளம் குழந்தைகளை கடித்த எலிகள்! ம.பி. யில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…