கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து கொண்டு, வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். வங்கிக்குள் நுழைந்த அவர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இதையும் படிங்க: நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!
அப்போது, அப்பகுதியில் இருந்த அலாரம் ஒலித்ததைத் தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வங்கியில் இருந்து பணம் அல்லது பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் வங்கிக்குச் சென்று, அங்கு தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!