உல்லாச வாழ்க்கைக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை ஈவு இறக்கமின்றி விஷம் கொடுத்து கொன்ற கொடூரத்தை அரங்கேற்றிய குன்றத்தூர் அபிராமியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.
அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்ததாகவும், இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தாய் அபிராமியை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.
இதுதொடர்பாக அபிராமி கொடுத்த வாக்குமூலத்தில், “என் குழந்தைகள் மற்றும் கணவரை கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என சுந்தரம் என்னிடம் தெரிவித்தார். எனவே, பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன்.மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். அடுத்தநாள் எனது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன் எனது மகனை மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்” எனக்கூறியது தமிழகத்தையே உலுக்கியது.
இதையும் படிங்க: #BREAKING உரிமை மீட்பு பயணத்திற்கு சிக்கல்... அன்புமணிக்கு ராமதாஸ் வைத்த செக் - அதிரும் அரசியல் களம்...!
இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுவரை இவ்வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22-பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடி வந்தார்.விசாரணை முடிந்து இவ்வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: "சொன்னா கேட்க மாட்டீயா?" - ஆசையாய் காத்திருந்த அதிமுக நிர்வாகிக்கு ஆப்பு... எரிச்சலான எடப்பாடி...!