தூத்துக்குடியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது 2 ஆயிரத்து 530 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 32 ஆயிரத்து 554 கோடி ரூபாய் முதலீட்டில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
TN Rising Investors Conclave 2025 என்ற பெயரில் ஒரு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் சந்திப்புகளை திமுக அரசு தொடர்ந்து நடத்தி வருவதாக கூறினார். சொன்னதை செய்வோம் என்பதுதான் திமுக அரசின் குறிக்கோள் என்றார். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக தமிழ்நாட்டை மாற்றுவோம் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சமூக நீதியா? அப்படின்னா என்ன தெரியுமா... முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த எல்.முருகன்!

மேலும் தென் தமிழ்நாடு பற்றி கலைஞர் கண்ட கனவு தற்போது நனவாக்கி வருவதாக தெரிவித்தார். தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயில் தூத்துக்குடி என்று கூறிய அவர், நான்கு ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்தார்.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை குறிப்பிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். திமுக அரசின் வெற்று விளம்பர அரசியலை தென்மாவட்ட மக்கள் நம்ப போவதில்லை என தெரிவித்தார்.
நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடு வந்துள்ளது எனக்கு கேள்வி எழுப்பிய அவர், எந்தெந்த நிறுவனங்கள் தொழிற்சாலையை தொடங்கியுள்ளன என அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: டெல்டா, தென் மாவட்டங்களில் டப்பா டான்ஸ் ஆடப்போகுது... அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஓபிஎஸால் காத்திருக்கும் பேராபத்து...!