ஆழ்ந்த காற்றழுத்த தாழ்ம மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழுந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில், அது அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதாகவும் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிக்க என்ன காரணம் என பார்க்கலாம்...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதனுடைய தீவிர தன்மையை தக்க வைத்து கொள்ளும் என இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதற்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு பிறகுதான் கடற்கரை ஒட்டி நகரும் பொழுது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பலவீனம் அடைய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: இலங்கைக்கு துணை நிற்போம்..!! உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயார்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தென்மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இன்று காலை 8:30 மணிக்கு அதே பகுதியில் தற்பொழுது நிலை கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து தற்பொழுது 40 km தொலைவில இந்த காற்றெழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது நிலை கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் தற்பொழுது நிலை கொண்டிருக்கு. சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும் நெல்லூரிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்பொழுது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கு.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தீவிரத்தை தக்க வைத்து அதற்கு பிறகாக இருக்கக்கூடிய 12 மணி நேரத்தில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தற்பொழுது சென்னைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கக்கூடிய நிலையில் அதிகபட்சமாக சென்னையை ஒட்டி 25 கிலோமீட்டர் தொலைவுக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வர வாய்ப்பு கூறப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய தினம் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில மழை பெய்து வரக்கூடிய நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில அதனுடைய தீவிர தன்மையை தக்க வைத்துக்கொண்டு அதற்கு பிறகாக 12 மணி நேரம் கழித்து தான் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்பதால் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புஸ்வானமான 'டிட்வா' புயல்..!! தமிழக கடற்கரைக்கு லேட்டா தான் வருமாம்..!! என்ன இப்படி ஆகிடுச்சு..!!