கோவை பெரியார் அறிவுலகத்திற்கு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய இரு நாள்களும் நூலகம் மூடப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பதிவில், “ஆயுதபூசைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே லீவு விட்ட அறிவார்ந்த ஆட்சி இன்றைய தவெக ஆட்சி! பேஷ்! பேஷ்! ஆனால் கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது. அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்ல” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஐடி விங் வெளியிட்ட கண்டன அறிக்கையில், விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களையும் அறிவியல் மையங்களையும் பார்வையிடுவார்கள் என்ற அடிப்படை புரிதல் கூட தவெக அரசுக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளது. பெரியார் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அரசு, பாஜக கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக விமர்சனம் எழுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையின் பெருமை..! "ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..!! பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்..!!

விஜயதசமி நாளில் வீடுகளில் புத்தகங்களை வைத்து வழிபடுவதும் குழந்தைகளுக்கு கல்வி தொடங்குவதும் வழக்கம். அறிவைப் போற்றும் அன்றே அறிவுலக வாசல்கள் மூடப்பட்டிருப்பது ஏன் என்று கேட்டு, உடனடியாக திறந்து பொதுமக்களை அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு, கோபி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துவந்த பெற்றோர்கள், முன்கூட்டியே அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டதால் ஏமாற்றமடைந்ததாக தெரிவிக்கின்றனர். இணையதளத்தில் திறந்திருப்பதாக தகவல் இருந்ததும் அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
https://x.com/TRBRajaa/status/2112427283558637976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112427283558637976%7Ctwgr%5E4ff6d8fbfdbdf6299f95b07ff6d22942bb1e914d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Fchennai%2Ftrb-rajaa-criticises-tvk-government-for-declaring-holiday-for-periyar-arivulagam-839485.html
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் அருகே சிறைத்துறை நிலத்தில் சுமார் 7 ஏக்கர் பரப்பில், ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த 7 தள வளாகம், திமுக ஆட்சியில் 2024-ல் தொடங்கப்பட்டு நிறைவடைந்தது. தரைதளம் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
கட்டுமானத்திற்கு ரூ.245 கோடி, புத்தகங்களுக்கு ரூ.50 கோடி, இ-புத்தகங்களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டன. முதலமைச்சர் விஜய் அக்டோபர் 16-ல் இதைத் திறந்து வைத்தார். அறிவுப்பரவலுக்கு விடுமுறை கூடாது என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: முதல்வன் சொன்னாலே ஸ்டாலின் தான் ஞாபகம் வருதோ.? CHEAP CM..! விளாசிய உதயநிதி.!!