'குமரி கண்டம்' என்று அழைக்கப்படும் இந்தியப் பெருங்கடலின் தெற்கே இருந்து, கன்னியாகுமரியிலிருந்து ஆஸ்திரேலிய வரை விரிந்திருந்த மாநிலம். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சான்றிதழ்களில் இதன் இருப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கண்டம், தமிழ் நாகரிகத்தின் தோற்ற இடமாகவும், பண்டைய தமிழர்களின் வாழ்விடமாகவும் கருதப்படுகிறது.
19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் 'லெமூரியா' என்று அழைத்த இந்தக் கண்டம், புவியியல் மாற்றங்கள் காரணமாக கடல் கொண்டு மூழ்கியதாகக் கூறப்படுகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பே குமரிகண்டன் தொடர்பாக குறும்படம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்து இருந்தது. இந்த முடிவு தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

இருப்பினும் அதற்கான முன்னெடுப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறது. குமரி கண்டம் தொடர்பாக உரிய ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. குமரி கண்டம் தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக நீருக்கடியில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும்... கொலீஜியத்துக்கு திருமா. வலியுறுத்தல்...!
குமரி கண்டம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 45 ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டம் குறித்து தகவல்களை குறும்படமாக தயாரிக்க அரசு முடிவு செய்ததாக தெரிவித்தனர். ஆனால், குறும்படம் தயாரிக்கும் முடிவில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது மறைந்த ஆய்வாளர் ஒரிசா பாலு அளித்த தகவல்கள் மூலம் இது தெரிய வருவதாகவும் கூறியுள்ளனர். குமரிக்கண்டம் தொடர்பான குறும்படம் தயாரிப்பதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தாங்கள் நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 15 வருட கனவு… 38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…!