சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ரேணுகா அவரது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்று விட்டு மீண்டும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது ரேணுகா குடும்பத்துடன் முன்பதிவு செய்த பட்டியில் வந்து கொண்டிருந்தபோது இரவு நேரம் தூங்கிக் கொண்டு வந்துள்ளனர். அப்போது குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகளை பையில் வைத்து அதனை அவரது தலையில் வைத்துள்ளார். அப்போது திடீரென அந்த பையை யாரோ எடுப்பது போல் தெரிந்திருக்கிறது. இதனால் திடிக்கிட்டு எழுந்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் அந்த நகை பையை எடுத்து வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பையை தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதனை அந்த நபர் கொடுக்க மறுத்து வெளியில் வீசி உள்ளார்.

திருமுல்லைவாயில் - அம்பத்தூரிடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது அவர் பையை ஓடும் ரயிலிலிருந்து வீசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பின் உடனடியாக அபாய சங்கலியை பிடித்து இந்த இழுத்து ரயிலை நிறுத்தினார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசாரும் அந்த நபரை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது விசாரணையில் அந்த நபர் அதிகாலை 4:30 மணியளவில் வாலாஜா ரயில் நிலையத்தில் ஏறியதும் அவர் ஒரு போலீஸ்காரர் என்பதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: 6 வருடமாக நாறிக்கிடக்கும் சென்னை-பெங்களூர் சாலை அகலப்படுத்தும் பணியை விரைவுப்படுத்துங்க..! கட்கரியிடம் கறார் காட்டிய அன்புமணி

கடந்த 21 ஆம் தேதி ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பும்போது தான் ஒரு முறையில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே பயணியிடமிருந்து நகைப்பையை திருடியுள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்தனர். மேலும் அந்த பையில் 6 லட்சம் மதிப்பில் ஆனதாக நகைகள் மோதரம் கைக்கடிகாரம் உள்ள பொருட்கள் இருந்ததாக கூறினர். நகைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்னை வந்தடைந்தது.
இதையும் படிங்க: மலைப்பாதையில் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்.. கொடுத்த நிதி என்னாச்சு? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!