நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இப் பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள் செயல்பட்டு
வருகின்றது.

இந்நிலையில் தற்பொழுது கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பி.காம் மாணவர்களுக்கான இன்டஸ்ட்ரியல் லா என்னும் தேர்வு நடைபெற இருந்தது.

இதற்காக 99 சென்டர்களுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு தேர்வுக்கான பணிகள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் இன்று நடக்க இருந்த பிகாம் இண்டஸ்ட்ரியல் லா என்னும் தேர்வை ரத்து செய்தார்.

இதையும் படிங்க: ஆட்டிசம் பாதித்த சிறுவனை கொன்று புதைத்த விவகாரம்... மேலும் ஒருவர் கைது... தொடரும் விசாரணை
தொடர்ந்து 99 சென்டர்களுக்கும் அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்ப பல்கலைக்கழகத்திற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில் உள்ள சீரியல் நம்பர்களை ஆய்வு செய்த பின்னர் வினாத்தாள் கசிந்து உள்ளதா எனவும் தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ரத்து செய்யப்பட்ட இந்த தேர்வு 30 அல்லது 31 ஆம் தேதி புதிய வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரஷ்யா பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது? அஜித் தோவல் குறித்து வெளியான முக்கிய தகவல்!!