மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் எம். பூமிநாதன், அண்மையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மதுரை மாவட்ட அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. புதூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன், மதிமுகவின் நீண்டகால உறுப்பினரும், வைகோவின் நம்பிக்கைக்குரிய சகோதரராக அழைக்கப்படுபவருமாவார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தற்போது மீண்டும் அதே தொகுதியில் மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பூமிநாதன் 2021-ல் மதுரை தெற்கு தொகுதியில் 62,812 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டாலும், மதிமுகவைச் சேர்ந்தவராக அறியப்பட்டார்.

அவரது வெற்றி, மதிமுகவுக்கு தொகுதியில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. தற்போது 2026 தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் மதுரை தெற்கு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக தலைமை, பூமிநாதனை மீண்டும் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது. சமீபத்தில் மதிமுக அறிவித்த நான்கு தொகுதி வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சொந்த கட்சிகாரங்களே கைவிட்ட பரிதாபம்... தவெக வேட்பாளர் சத்தியகுமாருக்கு வந்த சத்தியசோதனை..!!
பிரச்சாரத்தை தொடங்கிய பூமிநாதன், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாதனைகளை எடுத்துரைக்கத் தொடங்கியுள்ளார். பூமிநாதன் இந்த முறையும் மதுரை தெற்கு தொகுதியிலேயே களம் காண்பதால் ஏற்கனவே அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மீண்டும் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை... வார் ரூமில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..!!