தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்க துவங்கியுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழையும், அதி கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், தண்ணீர் தேங்க்ஸ் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 23ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாறுகிறதா என்பது நாளை தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகள் குழுவையும் நியமித்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேரிடர் சூழ்நிலைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். நெடுஞ்சாலைகள், மின்சாரம், மருத்துவம் மற்றும் பொதுப்பணித் துறைகள் விழிப்புடன் இருக்கவும் தயாராகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். கூடுதலாக, அவசரகால பயன்பாட்டிற்காக ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனமழை! மக்கள் பாதுகாப்பு முக்கியம்... திமுக மேயர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் அழைப்பு...!
அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கக்கூடிய அனைத்து நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். வருவாய் அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருந்து தேவைப்படும் போதெல்லாம் பொதுமக்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உடனே போங்க... NO EXCUSE... பருவமழையை எதிர்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்...!