தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேடை நாகரிகம் சிறிதும் இல்லாமல் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலம் தண்டனை வழங்கி தக்க பாடம் புகட்டியதாக அவர் குறிப்பிட்டார்.நாகரிகமற்ற நாராசப் பேச்சு திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கையான ஒன்று என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் மீண்டும் நிரூபணமாகிவிட்டதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சரை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்று அவர் சுட்டிக்காட்டினார்.அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா, அந்த நாராசப் பேச்சைக் கேட்டு குதூகலித்துச் சிரித்ததாகவும், மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. அந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்ததாகவும் அமைச்சர் கீர்த்தனா குற்றஞ்சாட்டினார்.

தேர்தலில் தோற்ற விரக்தி இருந்தாலும், அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல; பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.கனிமொழி, மேயர் பிரியா ஆகியோர் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா என்று அவர் கேட்டார்.
இதையும் படிங்க: திமுகவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மாளிகை மௌனம்? எம்.பிக்களை சந்திக்க மறுக்கும் திரவுபதி முர்மு?!
இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுகவின் ஆபாச-அநாகரிக டி.என்.ஏ. கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.தமிழ்நாட்டு மக்கள் திமுகவினரின் ஆபாச-அநாகரிகப் பேச்சுக்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் அநாகரிக திமுகவுக்குத் தோல்வியைத்தான் பரிசாக வழங்குவார்கள் என்றும் அமைச்சர் கீர்த்தனா எச்சரித்தார். அரசியல் மேடைகளில் கண்ணியம் மற்றும் பொறுப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: கட்சியா.? போதைப்பொருள் கூடாரமா.? செய்தியாளர்களுக்கு மிரட்டல்..! உதயநிதி கண்டனம்.!!