நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சி நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் கே.என். நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், அண்ணா சித்த மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது,தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நலன் காக்கும் சாலை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 3 முகாம்கள் என்ற விதத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியில் தலா நான்கு இடங்களிலும் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் தலா 3 இடங்களிலும் சென்னை பெரும் மாநகராட்சியில் 15 இடங்களிலும் இந்த திட்ட மூலம் முகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... கடலூர் சிப்காட்டில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலி...!
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றைய நாள் வரை 1256 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ரெண்டாம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் 17 வகையான மருத்துவ சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன.
38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் ஒரே நாளில் 45 ஆயிரம் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். கடந்த 9ம் தேதி ஊட்டி மற்றும் சென்னை ஆகியவை நீங்கலாக 36 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 48 418 பேர் பயன்பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 56 ஆயிரத்து 745 பேர் பயன்பெற்றுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 482 பேர் பயன்பெற்றுள்ளனர்.
1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி 60 ஆண்டுகள் நிறைவு செய்து வைர விழா கண்டுள்ளது. இந்த கல்லூரி உருவாக்கத்திற்காக 25 ஏக்கர் நிலம் கல்லூரியின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதனை நிறைவேற்றித் தரும் வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறை சார்ந்த உபரி நிலங்களை ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசு மூலம் விரைவில் எடுக்கப்படும்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் அறிவிப்புக்கு பின்னர் இதுவரை 494 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
விரைவில் உலக அளவில் தமிழகம் உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் பெறும் நிதிநிலை அறிக்கையில் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் பெயர்களை கௌரவிக்கும் வகையில் மரியாதைக்குரிய பெருஞ்சுவர் என்ற திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த பெருஞ்சுவர் எழுப்பப்பட்டு அங்கு உடல் தானம் செய்பவர்களின் பெயர்கள் பொறிக்கப்படும். இந்த திட்டம் ஒரு மாத காலத்திற்கு முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.
தமிழகத்தில் முதல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு சட்ட முன் வடிவு அனுப்பப்பட்டது. இதுவரை பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு 4 முறை திருப்பி அனுப்பி உள்ளார்.
கடந்த 21ஆம் தேதி 4 திருத்தங்களை குறிப்பிட்டு மீண்டும் ஆளுநர் சித்தப்பல்களை கழகத்திற்கான முன்முடிவை திருப்பி அனுப்பி உள்ள நிலையில் சட்ட வல்லுநர்களுடன் துறை செயலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு 4 திருத்தங்களை விரைவில் சரி செய்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக முப்பதுக்கு மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது முன்னணி வழக்கறிஞர்களைக் கொண்டு இந்த வழக்குகள் வாதாடப்பட்ட தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இன்னும் சில தினங்களில் அதற்கான தீர்ப்பு வந்தபடும் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறை திடீர் ரெய்டு...!