வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பயிர்கள் சேதம் அடையவில்லை, தாழ்வான பள்ளங்களில் நெருப்பயிர்கள் சாய்ந்து உள்ளது 25 ஆயிரம் எக்டர் பயிர் சாய்ந்துள்ளது. இதில் 255 ஹெக்டர் நெற்பயிர்கள் 33 சதவீதம் ஈரப்பதத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்றார் போல் இழப்பீடுகளை முதலமைச்சராக அறிவிப்பார்.
கடந்த ஆட்சி காலத்தை விட இந்த ஆட்சி காலத்தில் நெல்மணிகள் உற்பத்தி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது, கடந்த ஆட்சி காலத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி இருந்த நிலையில் தற்பொழுது 9 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகள் உற்பத்தி ஆகி வருகிறது, தீபாவளி விடுமுறை வந்ததால் சிறிது பணிகள் தோய்வில் இருந்து தற்பொழுது எந்த பாதிப்பையும் இன்றி அனைத்தும் நெல்மணிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
தவெக தலைவர் விஜய் முன்பு செட் அமைந்து நடித்தார், ஆனால் தற்போது அதே போன்று நடிக்கிறார், 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் தற்பொழுது அரசியலுக்கு வருவதால் ஏதோ ஆதாயத்துடன் தான் வருகிறார், ஆனால் கொரோனா களத்தில் மக்களுடன் நின்று போராடி வந்தவர் திமுக தான், ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பாராமல் எப்போதும் மக்களிடம் நிற்பது தான் திராவிட முன்னேற்ற கழகம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாமகவின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி... ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
டெல்டா மாவட்டங்களில் மழையால் பயிர்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கொள்முதல் செய்யப்படக்கூடிய நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று முதல் ஆய்வு செய்கிறது. செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, மதுரை, தேனி, கடலூர் மாவட்டங்களில் கனமழையால் ஆயிரக்கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கின.
அதுமட்டுமின்றி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே அடுக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கடன் வாங்கி பயிர் நடுவு செய்த விவசாயிகள் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். மழையால் சேதமடைந்த பயிர்கள் மற்றும் நெல் மூட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! கலெக்டர் அதிரடி உத்தரவு..!! எங்கு தெரியுமா..?