திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறினார். உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது என்று விளக்கம் அளித்தார்.

சுடுகாட்டில் தான் இறந்த உடலை எரிக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது அதனை மாற்ற முடியாது என்று கோவிலில் சுடுகாட்டோடு ஒப்பிட்டு பேசினார். இறந்த உடலை வேறு இடத்தில் எரிக்க முடியாது என்பதை போல் தான் மற்ற பழக்க வழக்கங்களும் என அமைச்ச ரகுபதி தெரிவித்தார். நூறு ஆண்டுகளாக இல்லாத வகையில் தீபமேற்ற உத்தரவிட்டு தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உங்க கனவை சொல்லுங்க… தமிழக அரசின் புதிய திட்டம்..! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!
இல்லாத ஒரு வழக்கத்தை கொண்டு வந்து தமிழ்நாட்டை குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்றும் கூறினார். இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் இதை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மதக் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மற்றும் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரகுபதி பேசினார்.
இதையும் படிங்க: இதை அன்றைக்கே செய்திருக்கலாமே..! யார் மத கலவரத்தை தூண்டுவது..? நயினார் விளாசல்..!