திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசின் தரப்பு வாதம் தவறானது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது. இதனிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என்று கூறிய தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று தெரிவித்தார்.
அன்றைய தீர்ப்பை நிறைவேற்றபட்டு இருந்தால் எந்த விதமான பிரச்சினையும் இருந்திருக்காது என்றும் யாருக்கும் மன கஷ்டம் ஏற்பட்டு இருக்காது என்றும் தெரிவித்தார். ஆளுங்கட்சி அரசியல் சதி செய்து மதக் கலவரம் என்று கூறுவதாக தெரிவித்தார். அப்படி என்றால் மத கலவரத்தை தூண்டுவது ஆளுங்கட்சி தானே என்று பொருள் படுகிறது கூறினார்.

எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வதாகவும், உச்சநீதிமன்றம் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்தார். இந்த அளவுக்கு செய்யும் அளவுக்கு என்ன நடக்க போகிறது என்றும் மத கலவரத்தை தூண்டுவது யார் என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடங்காத அதிகார திமிர்… திருந்தாத இந்து விரோத திமுக… விஷத்தை உமிழுவதாக நயினார் காட்டம்…!
அரசாங்கம் இதில் அரசியல் செய்யக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்து இருப்பதாகவும், மக்கள் மனதை புண்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். ஜூன் மாதத்தில் ஓய்வூதியம் தருவதாக கூறுவதாகவும் அப்போது யார் முதலமைச்சராக இருப்பார் என்ற கேள்வியையும் முன் வைத்தார். முழு பூசணிக்காயை திமுக அரசு சோற்றில் மறைப்பதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகுவார் என்று உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: நான்கரை ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… லிஸ்ட் போட்டு கொடுத்து இருக்கோம்… ஆளுநரை சந்தித்த இபிஎஸ் விளக்கம்…!