புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி தமிழக வெற்றிக் கழகம் குறித்து சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எந்த கட்டுப்பாடையும் அவர்கள் கடைபிடிக்க. கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் தான் அவர்கள் செல்கின்றனர். சனி ஞாயிறு விடுமுறை உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்கின்றனர். சுற்றுலா முடித்துவிட்டு வந்து விடுகின்றனர் இதைத்தவிர வேறு எந்த சாதனையும் கிடையாது. மக்கள் நிச்சயமாக அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்கு தெரியும் யார் வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பது தெரியும். நல்லாட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தமிழ்நாடு மக்கள்.
விமான நிலைய பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்திற்கு வெளியே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கலாம். விமான நிலையத்திற்குள் ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லாததால் தான் பொது சொத்துக்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றது.
ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் தான் இந்த வினை நடந்துள்ளது. அரசு கட்டுப்படுத்த போனால் எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவார்கள். அவருக்கு பெரிய கூட்டம் கூடியது நாங்கள் தடுத்து விட்டதாக சொல்வார்கள். இதைவிட பல மடங்கு கூட்டத்தை எல்லாம் அமைதியாக சந்தித்து சென்றவர்கள் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.
இதையும் படிங்க: “பார்த்தீங்களா உங்க தலைவர் லட்சணத்த... இனியாவது உஷாரா இருங்க”.. அதிமுகவினரை அலர்ட் செய்த திமுக அமைச்சர்..!
வடிவேலுக்கு சிவாஜிக்கு கூடாத கூட்டமா. சிவாஜி தேர்தலில் தோல்வியடைந்தார். அதேபோல் நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும். அது இயற்கை. கடைகளை திறக்க வரும் சாதாரண நடிகரை கூட பார்ப்பதற்கு கடைவீதிகளில் அதிக மக்கள் கூடுவார்கள். அது சினிமா மோகதால் வருவதை தவிர அரசியல் மோகத்தால் அல்ல.
அமைதியாக ரோட் சோ நடத்துவது எந்த தவறும் கிடையாது. ரோட்சோ மூலம் மக்களை சந்திக்கும் போது பல்லாயிரக்கணக்கான மக்களிடம் மனுக்களை முதலமைச்சரிடம் கொடுக்கிறார்கள். ரோட் சோ நடத்துவது மக்களுக்கு பலன் தருவதற்காக கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும் கட்டுப்பாட்டுகளை மீற போதுதான் இது போன்ற அசம்பாவிதம் நடக்கின்றன. நாங்கள் நடத்துகின்ற ரோட் சோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நின்று மனுக்களை நேரடியாக முதலமைச்சரிடம் தருகிறார்கள். அதற்கு முடிவு கிடைக்கிறது.
மக்களை சந்திப்பதில் ரோட் சோவை நாங்கள் ஒரு வழியாக வைத்துள்ளோம். எந்த ஊருக்கு முதலமைச்சர் சென்றாலும் மூன்று கிலோமீட்டர் நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று வழியில் இருக்கக்கூடிய மக்களை நேரடியாக சந்தித்து அதன் மூலமாக அவரிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கக்கூடிய நல்ல காட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
சமத்துவமே திமுக தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் திமுக. எல்லாத்திற்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய ஆட்சி திராவிட மடல் ஆட்சி. திமுக ஆட்சி தான். சமத்துவ ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி 2026 இல் சமத்துவ ஆட்சியாக உள்ள திமுக தான் வரும் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி! தவெகவுக்கு வேட்டு வெச்ச தூத்துக்குடி போலீஸ்