தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும், அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உணவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, நத்தம், ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த விழா விர்க்கு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார். மேலும். நத்தம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.50 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புறநோயாளிப்பிரிவு கட்டிடத்திர்க்கு பூமி பூஜை. மற்றும் நத்தம் பேருராட்சி அலுவலக கட்டிடம், நூலக கட்டிடங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.
அமைச்சர் சக்கரபாணி பேசும் பொழுது, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும், தற்பொழுது வரை மகளீர் உரிமைத்தொகைக்காக 6 லட்சம் மறுக்கள் பெறப்பட்டு உள்ளதாகவும். மகளீர் உரிமை தொகை அனைவருக்கும் சென்று அடையும் நோக்கத்துடன், முதியோர் உதவித்தொகை பெருவருக்கும் அவர்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், உழவர் அட்டை, இருசக்கர வாகன அரசுமானியம் வாங்கியவர்கள், ஆகிய மூன்று பேருக்கும் விதிகளை தளர்த்தி மகளின் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் பம்பர்.. மாதம் ரூ.1500.. எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!
தேர்தல் வாக்குறுதிகள் இல்லாமல் 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருவதாகவும். தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்ததின்பேரில் நத்தத்தில் கலை கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கல்லூரி சொந்தக் கட்டிடம் கட்டித்தர ரூ 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும், தமிழகத்தில் இன்னுயிர் காக்கும் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற தீர்ப்பு முதல்வருக்கு சம்மட்டி அடி! இனிமையாச்சு புரிஞ்சுக்கோங்க-நயினார் நாகேந்திரன்