சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகவும் திமுக அரசை பற்றியும் விமர்சித்து பேசி இருந்தார். கிட்னி விவகாரத்தில் எந்தெந்த மருத்துவமனைகள் ஈடுபட்டது என விளக்கமாக கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பேரவையில் அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்ததாகவும் தெரிவித்தார். திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் கிட்னி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் கூறினார்.
கிட்னி முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகரை தான் கைது செய்திருப்பதாகவும், மருத்துவமனை மீதி நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், திமுகவின் உருட்டு கடை அல்வா என பாக்கெட்டுகளை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். அதனை அனைவருக்கும் கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி விநியோகித்த பாக்கெட்டுகளில் அல்வாவுக்கு பதில் பஞ்சு இருந்ததால் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அல்வா என நினைத்தால் பஞ்சு தான் இருக்கும் என்பது போல திமுக வாக்குறுதிகள் ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், Instagram ரீல்ஸ்காக அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். உண்மையை மறைத்து பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கிட்னி முறைகேடு... அது திமுக MLA ஹாஸ்பிட்டல்.. அதான் கண்டுக்கல... இபிஎஸ் விளாசல்...!
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரச திமுக அரசு என்று குறிப்பிட்டார். பிற மாநிலங்கள் தமிழகத் திட்டங்களை பின்பற்றுவதாக அறிவித்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். பாலோயர்ஸ்களை அதிகப்படுத்த பேட்டி கொடுக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவை விமர்சிப்பதால் பெரிய ஆளாகி விட முடியாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நாங்க 10 வருஷத்துல வாங்குன கடனை நீங்க நாளே வருஷத்துல வாங்கிட்டிங்க.. அமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி…!