அடையாறின் முகத்துவாரம், திரு.வி.கா. பாலம் முதல் கடற்கரை வரையிலான சுமார் இரண்டு கி.மீ. நீளம் கொண்ட பகுதியை உள்ளடக்கியது. இங்கு, மழைநீர் கலந்து கடலுடன் இணைவது போல் தோன்றினாலும், வெள்ளநீர் சீராக ஓடுவதில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட கனமழைக்குப் பின், இந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், அப்புறப் பகுதிகளான ஸ்ரீநிவாசபுரம், காசி நகர் போன்ற இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதைத் தடுக்க, அரசு 2023-ஆம் ஆண்டு தொடங்கிய தூர்வாரும் திட்டம், ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் அமைந்தது. இந்தப் பணியின் முதல் கட்டமாக, திரு.வி.க. பாலத்திற்கு அருகிலிருந்து முகத்துவாரம் வரையிலான 1.9 கி.மீ. தூரத்தில் மாசுகளை அகற்றும் வேலைத் தொடங்கியது. இதன் மூலம், ஆற்றின் அகலத்தை அதிகரித்து, வெள்ள நீர் ஏற்றத்திற்கு இடமளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூர் வாரும் பணிகள் நடந்து வரும் நிலையில், பணிகளை துரிதப்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் இன்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மழை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சின்னதா தான் முளைச்சு இருக்கா? அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு... ஃபெயிலியர் மாடல் DMK... இபிஎஸ் விமர்சனம்...!
இந்த நிலையில், சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாகாரத்தில் தூர்வாரும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உலகளாவிய போராட்டம் தொடரட்டும்! வைக்கம் விருது வென்றுள்ள தேன்மொழிக்கு MP கனிமொழி வாழ்த்து...!