சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் சேலம் செவ்வாய்பேட்டை தினசரி சந்தை ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் தலைவாசல் வேளாண் விற்பனைகளை 10 கோடியில் சீரமைக்கப்படும் எனவும் சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என்றும் கூறினார்.

தாரமங்கலம் நகராட்சி 18 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் சேலத்தில் 548 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். சேலத்தின் வளர்ச்சிக்கு அயராத உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி என பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து, சேலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். டெல்டாவின் உயிர்நாடியாக உள்ளது காவிரி நீர்., 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை 131 ரூபாயாகவும் சன்ன ரக நெல்லுக்கான விலை 156 ரூபாய் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஜூன் 12ல்.. மேட்டூர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்..! திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

மேலும், சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலை, அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். நெல் கொள்முதல் விலை உயர்த்துவதாக அறிவித்த முதலமைச்சர், விவசாயிகள் நெல் குவின்டாலுக்கு 2500 பெறுவார்கள் என தெரிவித்தார். சன்னரக நெல் ஒரு குண்டால் 2547 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் இதுவரை சேலத்தில் ஒன்பது உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் கூறினார்.

கடந்த நான்காண்டுகளில் சேலத்திற்கு 7,500 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன., சேலத்தில் 52 கோடியில் மூன்று நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன., சேலத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன., 20 கோடியில் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., சேலத்தில் 548 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!