நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உடனிருந்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருமதி சோனியா காந்தி மற்றும் அன்பு சகோதரர் ராகுல்காந்தி ஆகியோரை சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது என்றும் இது ஒருபோதும் ஒரு வருகையாக உணரப்படுவதில்லை., உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: இன்று மாலை காங். காரிய கமிட்டி கூட்டம்! என்னென்ன விவாதிக்கலாம்... தீவிர ஆலோசனை நடத்த திட்டம்!
இதையும் படிங்க: மோடி ஆட்சியின் மர்மம்... சோனியாவின் 'தெரியாத' நோய் மறைந்தது எப்படி..? அதிர்ச்சி பின்னணி..!