திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, 2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது லேப்டாப் திட்டத்தை நிறுத்தி வைத்ததாக கூறினார். அதிமுக ஆட்சியில் 55 ஆயிரம் லேப்டாப்களை வீணடித்ததாக சிஏஜி அறிக்கை வெளியிட்டதாக தெரிவித்தார்.
தைப்பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுக்கப்படுவதாகவும் மாணவர்களுக்கு இலவசம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியவர் ஈபிஎஸ் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியின் திட்டங்களால் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைக்கும் என்றும் கூறினார்.

அமித் ஷாவா அவதூறு ஷாவா என்ற சந்தேகம் வருகிறது என்று கூறினார். அமித் ஷாவுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்தார். திமுக ஆட்சியில் நான்காயிரம் கோவில்களில் குடம் உனக்கு நடத்திய இருப்பதாக தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் இவ்வளவு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் பயணம்... திட்டப்பணிகள், பேருந்து சேவையை தொடங்கி வைத்து சிறப்பிப்பு...!
உண்மையான பக்தர்கள் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாமல் அமித் ஷா குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று கூறினார். தமிழகத்தில் கலவரம் செய்து விடலாம் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நடக்காது என்று உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார்..! அமைச்சர் மூர்த்தி பேட்டி...!