தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதனிடையே, தமிழ்நாட்டு மக்களை ஒரு பொது இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, மாநிலத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக உத்தியைக் குறிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனிடையே, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் 1.35 கோடி பேர் திமுகவில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற வரவேற்பை முதலமைச்சர் கேட்டறிந்தார். தேர்தல் பணிகள் தொடர்பாகவும் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: இவரே குண்டு வெப்பாராம்.. இவரே அதை எடுப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்.. விளாசிய இபிஎஸ்..!
அப்போது, உறுப்பினர் சேர்க்கையில் போலித்தன்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக உறுப்பினர் சேர்க்கை முழுமையாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். பணியை சரியாக பின்பற்றவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறினார் .
இதையும் படிங்க: இபிஎஸ் அணி, வேலுமணி அணி ... 2 துண்டாகும் அதிமுக... பகீர் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி