சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றை திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார். மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உட்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த கருணாநிதி உத்தரவிட்டதாக கூறினார்.
காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதி காப்பாற்ற வேண்டும் காமராஜர் சொன்னதாக பேசி இருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக கேள்வி எழுப்பினார். கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசி இருப்பதாக கண்டனம் தெரிவித்தார். கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய் என்றும் திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.

பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண் என்று விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார் என்றும் உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே எனவும் கேட்டுள்ளார். அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே என சாடிய அவர், காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை என்றார்.
இதையும் படிங்க: அம்புட்டு பாசமா? கம்யூனிஸ்டுகளுக்கு இபிஎஸ் விரிப்பது வஞ்சக வலை.. சண்முகம் காட்டம்..!
அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே என கூறிய இபிஎஸ், இவரே வெடிகுண்டு வைப்பாராம்., இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்., நடிக்காதீங்க ஸ்டாலின் என விமர்சித்துள்ளார். அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று., மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜர் புகழை துளியும் குறைந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BYEBYE STALIN கதற விடுது..! இன்னும் கதற விடுவோமா? அடித்து தூள் கிளப்பும் இபிஎஸ்..!