ஹாக்கி என்பது உலகளாவிய விளையாட்டாக இருந்தாலும், இளையோருக்கான உலகக் கோப்பை போட்டி அதன் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான நிகழ்வாகத் திகழ்கிறது. இந்தப் போட்டி, 21 வயதுக்குட்பட்ட இளம் வீரர்களின் திறமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அடுத்தடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கிறது. 2025 ஆம் ஆண்டு நிகழும் இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை, இந்தப் போட்டியின் 14ஆவது பதிப்பாக இருக்கும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து நடத்து 14 வது ஆடவர் ஹாக்கி போட்டி கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றி கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். மேலும், இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை வெற்றிக்கோப்பை, போட்டிக்கான காங்கேயின் இலட்சியினையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை நான்கு தளங்களில் கூடுதல் படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனை 23 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட நிலையில், முதல்வர் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: முழு வீச்சில் பரந்தூர் ஏர்போர்ட் பணிகள்... 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதாக தகவல்...!
தொடர்ந்து, அர்ச்சகர், ஓதுவார், தவில், நாதஸ்வர பயிற்சி பெறும் 297 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். திவ்ய பிரபந்த பாடசாலை, வேத ஆகம பாடசாலை என 18 பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி உள்ளார். 297 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு முதலமைச்சர் வரைவோலை வழங்கினார்.
இதையும் படிங்க: இது தான் DMK பார்முலா... பொன்முடிக்கு மீண்டும் பதவி! அதிமுக ஆவேசம்...!