பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது. அங்கு 20 கிராமங்களை உள்ளடக்கிய புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இறங்கியுள்ளன.
பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து 2026-ம் ஆண்டு தொடங்கி 2028-ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டு உள்ளனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது எனக் கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இழப்பீட்டுத் தொகை வழங்கினாலும் கூட தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு செல்ல மறுத்து வருகின்றனர்.

இருப்பினும் நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யிடம் பரந்தூர் மக்கள் ஆதரவு கூறினார். பரந்தூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிடில் பரந்தூர் மக்களுடன் தலைமைச் செயலகம் வருவேன் என்று விஜய் எச்சரித்து இருந்தார். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அது என்ன கவர்மெண்ட் பணமா? வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு! அதிரடி உத்தரவு...!
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு 400 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்திற்கு தேவையான மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குன்னூரில் ஒரே வீட்டில் 79 ஓட்டுகளா? சர்ச்சை... TN FACT CHECK கொடுத்த விளக்கம்...!