இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தங்கையுமான கனிமொழிக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெருமையோடு தெரிவித்துள்ளார். கனிமொழியின் அரசியல் பயணம் 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ராஜ்யசபாவில் திமுகவின் தலைவராகவும், குழு தலைவராகவும் பணியாற்றினார். கட்சியில் இலக்கிய அணி தலைவராகவும், மகளிரணி செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தார்.
பெண்களை அரசியலுக்கு ஊக்குவிப்பது, பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்புவது, கலை இலக்கியத்தை ஊக்குவிப்பது போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கினார். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை 'கலைஞர் 85' என்ற பெயரில் ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்க உதவினார். 2019 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தூத்துக்குடி தொகுதியிலிருந்து முதல் முறையாக நேரடித் தேர்தலில் போட்டியிட்டு, அத்தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல். பின்னர் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்று, தற்போது லோக்சபா உறுப்பினராக உள்ளார்.
திமுகவில் துணைப் பொதுச்செயலாளராகவும், நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் பொறுப்புகளை வகிக்கிறார். பாராளுமன்றத்தில் ரசாயனம் மற்றும் உரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்ற நிலைக்குழுக்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.கனிமொழி அவர்கள் பெண் அதிகாரமளிப்பு, சமூக நீதி, தமிழ் கலாச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: ADMK கோட்டையிலேயே ஓட்டை.. இந்த அவமானம் உனக்கு தேவையா? EPS- ஐ பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்..!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் கொண்டாடும் கனிமொழிக்கு முதலமைச்ச ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காகவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி என்று புகழாரம் சூட்டினார். என் பாசத்திற்குரிய தங்கை கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பாசத்தோடு வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதையும் படிங்க: அவங்க கிள்ளுக்கீரையா?.. இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி... திமுகவை தோலுரித்த EPS...!