தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பாடியநல்லூரில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்தார். “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்டம், மக்களின் எதிர்கால ஆசைகளையும் தேவைகளையும் நேரடியாக அறிந்து கொள்ளும் ஒரு மகத்தான முயற்சியாக உருவெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் வளர்ச்சியடைந்த, மக்கள் நலன் சார்ந்த மாநிலமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். 2030 ஆம் ஆண்டில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைப்பதற்கான திட்டம் என்று தெரிவித்தார்.

தமிழக வரலாற்றில் இன்று மிக மிக முக்கியமான நாள் என்று கூறினார். மக்களின் கனவுகளை அவர்களது வீடுகளுக்கே சென்று கேட்டறையும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து திருச்சி மாநாட்டில் வழங்கிய 7 வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். ஏழு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். என்றும் சொன்னால் சொன்னதை செய்வேன் எனவும் தெரிவித்தார். மேலும் 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: உங்க கனவை சொல்லுங்க... புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!
மேலும், இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் நினைக்கும்போது அவர்களின் முதல் தேர்வு தமிழகம் தான் என்று கூறினார். இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலை சிற்றுண்டி போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், ஐநா மன்றமே பாராட்டும் வகையில் மக்கள் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறினார். மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது என்றும் பிற மாநிலங்களில் தலைநகரங்கள் மட்டுமே வளரும் என்றும் தமிழ்நாட்டில் மட்டும் தான் பரவலாக வளர்ச்சி இருப்பதாகவும் தெரிவித்தார். சமூக நீதி அரசை நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊழல் ஊற்று திமுக... பணக்கட்டுகள் எண்ணிய உடன்பிறப்புகள் சிறைக்கம்பி எண்ணுவார்கள்... நயினார் உறுதி...!