நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் துறையில் உதவி பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக பொருளாதார 11. 19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதாக கூறினார். நாம் பணித்ததை விட 2.2 சதவீதம் அதிகமாக தமிழக பொருளாகாரம் வளர்ந்து உள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: தொடரும் ஆணவப் படுகொலைகள்.. தனிச்சட்டம் இயற்றுங்கள்! திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்..!
ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி, இரட்டை இலக்கமாக இருந்தது என்றும் கூறினார். இது எந்த ஒரு மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி என்று தெரிவித்தார். இந்தியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் உள்ளது என்றும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது எனவும் கூறினார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிதான் நேற்று இரவில் இருந்து TALK OF THE TOWN! TALK OF THE NATION ஆக உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு இந்த வெற்றி செய்தியை காணிக்கையாக்குவதாகவும் இன்னும் அதிகமான உயரத்தை அடைவதற்கான பயணத்தை தொடர்வோம் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்கள் தான் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர் எனக் கூறிய அவர், இது சாதாரண வெற்றி அல்ல., அவதூறு, நெருக்கடிகளுக்கு இடையே நாம் அடைந்த மிகப்பெரும் சாதனை என்றார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும், தேர்வாணையம், பொது துறைகள் மூலமாக 1.38 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 89 இளைஞர்கள் மத்திய அரசின் முக்கிய பணியில் உள்ளதாகவும் பெருமிதம் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுல காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல! முதல்வரை நார் நாராக கிழித்த நயினார்..!