ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவது எந்த அளவிற்கு நன்மை தருகிறதோ அந்த அளவிற்கு பிரச்சனைகளையும் கொடுக்கிறது. ஏஐக்கு முன்பிருந்தே மார்பிங் சர்ச்சைகள் நீடித்து வந்தாலும் தற்போது அச்சு, அசலாக ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பரப்பும் போக்கு அதிகரித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake) வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரைத் தொடர்ந்து, நடிகைகள் கஜோல், கேத்ரீனா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பலரின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
தற்போது, கோவையை சேர்ந்த பெண் ஒருவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களுடன் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனக்கு ராக்கி கட்டிய 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வக்கிர மிருகம்... அடுத்தடுத்து செய்த கொடூரம்...!
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் விரைவாக விசாரணையை தொடங்கினர். தொழில்நுட்ப அடிப்படையிலான சான்றுகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை ஆய்வு செய்த அவர்கள், குற்றவாளியின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
விசாரணையில், இந்தச் செயலில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு (29) என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பெண் ஊழியர்களிடம் டபுள் மீனிங் பேச்சு... வேளாண் இணை இயக்குநருக்கு வச்சாச்சு ஆப்பு...!