ஒண்டிக்குப்பதில் 2 இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். பைக்கில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அதிரவைக்கும் காட்சிகள் வெளியாகின. கொலைக்கு நீதிகேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் 2 இளைஞர்களை அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட கும்பல் 3 பேரை கொடூரமாக தாக்கியதில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக்கில் வேகமாக சென்றவர்களை மெதுவாக செல்லுமாறு கூறியதால் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பைக்கில் வந்தவர்கள் கற்களால் தாக்கியதில் இளைஞர்கள் பார்த்திபன், சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் கேசவமூர்த்தி படுகாயம் அடைந்தார். இதனிடையே, 3 பேரையும் மர்ம கும்பல் கற்களால் தாக்கும் கொடூர காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: எல்லாமே பெரியார்தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம்... சீமான் தடாலடி...!
திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பத்தில் கூர்மையான கற்களால் கொடூரமாக தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில் சம்பவத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல் செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக் கல்வித் துறை சீர்கேட்டால் தான் மாணவன் மரணம்... பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு...!