அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் திமுக செயல் பட்டு வருகிறது. இரட்டை இலை ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி இருந்தபோது கூட திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை என்று கூறினார். கோவையில் செந்தில் பாலாஜி வாக்குக்கு தங்க நாணயம் வழங்குகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து விஜய் குறித்து செய்தியாளர் கேள்வி கேட்டபோது ஜோசப் விஜயா ஜோசப் கிருஷ்ணா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!