நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலியில் நீண்டகால அரசியல் செல்வாக்கு கொண்டவராக அறியப்படுகிறார். 1960 அக்டோபர் 16ஆம் தேதி பணகுடியில் பிறந்த இவர், தனது அரசியல் பயணத்தை அதிமுகவில் தொடங்கினார். 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அதே திருநெல்வேலி தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பிலேயே அதே தொகுதியில் போட்டியிட்டபோது இலட்சுமணனிடமே சுமார் 601 வாக்குகள் பின்தங்கி தோல்வியைத் தழுவினார். 2017ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆனால் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றார். திருநெல்வேலி தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த தொகுதியில் போட்டி என்பதை நயினார் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: மூன்றில் இரண்டு முறை காலி... சாத்தூருக்கு தாவிய நயினார்... நெல்லை சென்டிமெண்ட் ரகசியம் தெரியுமா?
சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்துள்ளார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜகவின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!