பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்களைப் போல, ஆவினும் செழிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். மேலும், ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் பட்டியலிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடவும் கேட்டு உள்ளார்.
கடந்த சில தினங்களில் மட்டும், கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் சுமார் 30% வரை குறைவு என்றும் சில ஆவின் நிலையங்களில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கெடுபிடி எனவும் வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படைத் தேவைக்கு பெருமளவில் நம்பியிருக்கும், ஆவின் நிறுவனத்தில் இதுபோன்ற குளறுபடிகள் தொடருமானால், மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களேயே நாட வேண்டியிருக்கும் என்றும் இது தமிழக மக்களை நிதிச்சுமைக்குள் தள்ளுவதோடு, அவர்களின் ஊட்டச்சத்தையும் பலிகடாவாக்கும் எனவும் எச்சரித்து உள்ளார்.
இதையும் படிங்க: நலத்திட்ட உதவியில் ரேஷன் அரிசி..! வெட்கக்கேடு..! விளாசிய நயினார்..!!
ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அமுல் போன்ற பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்களைப் போல, ஆவினும் செழிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மாத்திரையை கூட போதை பொருள் மாதிரிதான் பயன்படுத்துவாரா..? சிக்கிய அமைச்சர்... நயினார் தாக்கு.!