நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசியை விநியோகித்த தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை தேவை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன. மதுரையில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை ஒட்டி வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் ரேஷன் அரிசி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.
மதுரையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசியை முறைகேடாக நலத்திட்ட உதவியாக வழங்கியதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டி மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார். அரசு வழங்கும் இலவச அரிசியை தங்களின் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடான செயல் என கூறியுள்ளார்.

விநியோகிக்கப்பட்ட பைகளில் துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேஷன் அரிசி இருந்ததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அரிசியைப் பறிமுதல் செய்து ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாத்திரையை கூட போதை பொருள் மாதிரிதான் பயன்படுத்துவாரா..? சிக்கிய அமைச்சர்... நயினார் தாக்கு.!
எனவே, புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, உரிய விசாரணை நடத்தி, புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய விதிமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!