தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான விவகாரம், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஊகங்கள்தான். கடந்த சில நாட்களாகவே ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.
இந்த பேச்சுகளுக்கு முக்கிய தொடக்கப் புள்ளியாக ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விஜயுடன் தொலைபேசி மூலம் பேசியதாகவும், தவெகவை NDA கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ளும் வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றும், குறிப்பாக விஜய் NDA-யில் இணைய வேண்டும் என்றும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ரகசிய தகவல்கள் கசிந்ததாகவும், இது தமிழக அரசியலில் 'மெகா ட்விஸ்ட்' என்று அழைக்கப்படும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக "குண்டர்கள்" அட்டூழியம்... ஒரே நேரத்தில் 2 உயிரை காவு வாங்கிய உ. பி. க்கள்... நயினார் கொந்தளிப்பு..!!
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணியில் துணை முதல்வர் பதவியை விஜய்க்கு கொடுக்க உள்ளதாக வெளியான செய்தி வதந்தி என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பாஜக பங்கு கேட்கவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!