தமிழகத்தில் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதற்கான ஆயத்தப் பணிகளுல் ஒன்றான 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி மாநாடு, BLA-2 பயிலரங்கக் கூட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) பற்றிய பயிலரங்கக் கூட்டம் நேற்றைய தினம் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது தொடங்கி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
டிசம்பர் 13,14,15 மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டங்கள், ஒரே சமயத்தில் நடைபெறுகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

இந்த நிக்வுகள் அனைத்தையும் வெற்றிகரமாக வடிவமைத்து அதை செயல்படுத்தி வரும் தேசிய SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கமிட்டி உறப்பினர் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் மற்றும் BLA-2 மாநில அமைப்பாளர் கரு நாகராஜன், மாநில துணைத் தலைவர் மற்றும் பூத் கமிட்டி மாநில அமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலும் கலவரம்... பாஜக முயற்சி எடுபடாது... TKS இளங்கோவன் திட்டவட்டம்...!
மேலும் இது நம் தமிழக பாஜகவிற்கும் நம் NDA கூட்டணிக்கும் கிடைத்த வெற்றிக்கான முதல் படி என்றும் தெரிவித்தார். அனைத்து BLA-2 பூத் முகவர்களும் இந்த பயிலரங்கக் கூட்டத்தை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்... பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... செல்வப் பெருந்தகை கண்டனம்...!