திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பூங்கா, மருத்துவமனை போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை என்றும் அவற்றை செய்தீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
வீடுகளுக்குச் சென்று மின்சார மீட்டர் அலகுகளைக் கணக்கெடுக்கும் பணியாளர்களே மின் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று சொன்னீங்களே செய்தீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கிகள் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும், மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரிடையாகச் சென்றும் மின்கட்டணம் செலுத்தும் முறைகளை ஒரே நேர்க்கோட்டில் இணைப்பதாகக் கூறிவிட்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை அந்த வாக்குறுதியை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: நீதிக்கே வாய்ப்பூட்டு... மிரட்ட நினைக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி... நயினார் கடும் விமர்சனம்..!
வருடத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை மட்டும் பன்மடங்காக உயர்த்தத் தெரிந்த திமுக அரசுக்கு, மின்சாரத்துறை சம்பந்தமாகக் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட நினைவில் இல்லை என்பது தான் ஆச்சரியம் என்றும் சாடினார்.
அதுசரி, திமுக அரசு நல்லவையை நினைவில் கொண்டிருந்தால் தமிழகம் எதற்கு இப்படி நாசமாகிக் கொண்டிருக்கிறது என்று சாடியுள்ளார். வீடுகளுக்குச் சென்று மின்சார மீட்டர் அலகுகளைக் கணக்கெடுக்கும் பணியாளர்களே மின் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை எப்போது கொண்டுவரப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அப்பாவின் ஆட்சியில் காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்... நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டு..!