நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் பதவி நீக்கும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வழங்கினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உள்நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. நீதிபதி சாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியினருடன் இணைந்து நோட்டீஸ் வழங்கி உள்ளது. பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் இணைந்து திமுக எம்பிக்கள் கனிமொழி உள்ளிட்டோர் தீர்மான நோட்டீசை அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்து உடன் பதவி நீக்கம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர இந்தியா கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது என்று கூறினார்.

இந்தக் கூட்டணியின் தலைமையான காங்கிரஸின் அவசரச் சட்டம் மூலம் நமது நாட்டையே இருண்ட காலத்தில் தள்ளி அரசியலமைப்புச் சட்டத்தையே உருக்குலைத்துப் போட்டதை இன்றும் மக்கள் கொடுங்கனவாக எண்ணி நடுங்குகிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்பாவின் ஆட்சியில் காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்... நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டு..!
இதே கூட்டணியின் தமிழக முகமான திமுக தான் நூற்றாண்டுக் கோயில்களை இடத்தேன் என்று சொல்பவர்களை மூத்தத் தலைவர்களாகவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் கறுப்பர் கூட்டங்களைத் தொண்டர்களாகவும் வைத்திருக்கிறது என்றும், ஜனநாயக தேசத்தில் வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சியை நீதி முறியடித்தது அவர்களுக்குப் பேரிடி தான் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் தான் இப்பொழுது அந்த நீதிக்கே வாய்ப்பூட்டு போட இந்த மக்கள் விரோத கும்பல் நினைக்கிறது என்றும் கடுமையாக சாடினார். இது அவர்களது அரசியல் பிழைப்பிற்காக இந்திய நாட்டின் ஜனநாயகத் தூணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒரு செயல் என்றும் இதை தேசிய ஜனநாயக் கூட்டணி முறியடிக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அய்யாச்சாமி..! திமுக ஊழலை பார்த்து கால்குலேட்டரை கன்பியூஸ் ஆயிடும்.. நயினார் கடும் விமர்சனம்..!