நாய்க்கடி சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையை வெறிநாய்க்கடி மையமாக திமுக அரசு மாற்றிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 2025-ஆம் ஆண்டு மட்டும் மதுரையில் 18,000 பேர் வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டு உள்ளது. இதனை சுட்டிக்காட்டி, வெளிவந்துள்ள இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிலும் கடந்த 2024-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், தற்போது 4,000 வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு, ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,700 பேர் வெறிநாய்க்கடியால் அவதியுறுவதாகவும் வெளிவந்துள்ள தரவு, மதுரை மாநகர் நாய்க்கடிகளின் மையமாக உருவெடுத்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க: பயத்தை போக்க இபிஎஸ் போட்ட மேக்கப் தான் பொதுக்குழு கூட்டம்... R.S பாரதி விமர்சனம்...!
தெருக்கள் தோறும் குப்பைக்கூளமாகவிட்டு இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கச் செய்ததோடு, தெருநாய்களையும் பெருகவிட்டு சங்கம் வைத்த மாநகரை நோய்களின் சங்கமாக திமுக அரசு உருமாற்றி வருகிறது என்று கூறினார்.
ஊழல் பெருச்சாளிகள் மூலம் மதுரை மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டித் தின்றது போதாதென்று, இப்படித் தெருநாய்களைப் பெருகவிட்டு மக்களின் உயிரோடும் விளையாடுவது தான், உங்களின் வளர்ச்சி அரசியலா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: சொந்த காசியில் சூனியம் வைத்துக் கொண்ட திமுக... பென் டீம் கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்... ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய சர்வே...!