2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுகவும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவும் தீவிரமாக களமாடி வருகின்றன. என்னதான் செல்வாக்கு நிறைய கட்சியாக இருந்தாலும் பாஜகவால் தமிழகத்தில் உறுதியாக காலூன்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசியல் களம் என்பது பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துவிட்டது. இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே உத்தேச பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக தகவல் பரவியது. இந்த நிலையில், பாஜகவின் புதிய செயல் தலைவர் நிதின் நபினை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: வஞ்சிக்கப்படும் விவசாயிகள்..! நாடு போற்றும் நல்லாட்சி? நல்லாருக்கு லட்சணம்.. நயினார் விமர்சனம்...!
அப்போது, மரியாதை நிமித்தமாக அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். அமித் ஷாவிடம் உத்தேச பட்டியலை வழங்கியதாக வெளியான தகவல் தவறு என்றும் தெரிவித்தார். இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று விளக்கம் அளித்தார். தமிழகத்தில் மூன்று முனை போட்டி வந்தாலும் சரி, நான்கு முனை போட்டி வந்தாலும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐபிஸ் மூளை... அரசியல் வேலை... கேரளாவை கதி கலங்கவிட்ட பெண் சிங்கம் ... யார் இந்த ”ரெய்டு” ஸ்ரீலேகா...!