நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள கீழேரிப்பட்டிபகுதியில் பரமசிவம் என்பவரது வீட்டில் இருந்த தறிப்பட்டறையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்ப்
கீழேரிப்பட்டி தேவனாங்குறிச்சியில் வசித்து வந்த சீனிவாசன்(47) என்பவருக்கு நீலா (38) என்ற மனைவியும் , கீர்த்திவாசன் (22) என்ற மகனும், காவியா (19) என்ற மகளும் உள்ளனர். மகன் கீர்த்தி வாசன் சென்னையில் மெண்ட்டோர் கம்பெனியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். மகள் காவியா சண்முகா கல்லூரியில் BE biomedical engineering 3rd year படித்து வருகிறார். இவர்களுக்கு பூர்வீகம் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள அலவாய்பட்டியாகும்.
இவர்கள் கீழேரிப்பட்டிக்கு வந்து சுமார் 16 வருடங்கள் ஆகிறது. சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். சீனிவாசனின் பெற்றோர் அங்கமுத்து மற்றும் உடன் பிறந்த அக்கா புவனேஸ்வரி ஆகியோரும் இவ்வூரிலேயே குடியிருந்து வருகின்றனர். சீனிவாசன் தனக்குத் தெரிந்த வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் என்பவருடைய வீட்டு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து 15 வருடமாக சொந்தமாக ஆறு தறி போட்டு தொழில் செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகன் கீர்த்தி வாசனை சென்னை சென்று பார்த்துவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். இரவு சீனிவாசன் மற்றும் நீலா மகள் காவியா மூவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் இரவு 11.00 மணி அளவில் தூங்கச் சென்றுள்ளனர்.
காலை 5 மணிக்கு காவியா எழுந்து பார்த்தபோது வீட்டில் அப்பா, அம்மா இருவரும் இல்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவர்கள் அருகிலேயே உள்ள தறி பட்டறைக்குச் சென்றிருப்பார்கள் என நினைத்து தூங்கிவிட்டார். இந்நிலையில் காலை ஆறு மணிக்கு தங்கள் தறிப்பட்டறையின் கட்டிட உரிமையாளர் பரமசிவம் என்பவர் தனது அப்பா அம்மா இருவரும் பட்டறைக்குள் தூக்கு போட்டு தூங்கிக் கொண்டிருப்பதாக தகவல் கொடுத்ததாகவும் தெரிகிறது.
மேலும் கட்டிட உரிமையாளர் பரமசிவம் இன்று விடியற்காலை நாலு மணி சுமாருக்கு பாத்ரூம் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியில் வந்த போது தறி பட்டறையில் லைட் எரிந்து கொண்டிருந்ததாகவும் தறி ஓட்ட வந்து இருப்பார்கள் என நினைத்து சென்றுள்ளார்.
ஆனால் மீண்டும் காலை 6 மணிக்கு அவர் வெளியே வந்த போது எதுவும் தறி ஓடும் சத்தம் இல்லாததால், கதவை லேசாக திறந்து பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் தறியில் பயன்படுத்தும் நாடாவால் பட்டறைக்குள்ளேயே தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருப்பதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரது உறவினருக்கு தகவல் கொடுத்ததோடு, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு நகர போலீசாருக்கு நகர காவல் ஆய்வாளர்கோபாலகிருஷ்ணன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் வந்து தம்பதியின் சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உறவினர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தம்பதி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திருமுல்லைவாசலில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, மகன் கொலை; தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!!