நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே மருத்துவ கழிவுகள் எரிக்கப்பட்டதால் கூறப்படும் சம்பவம் குறித்த காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிச்சென்ற மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பெரிய லாரி ஒன்றில் அதிக அளவில் கழிவுகளைக் கொண்டு வந்து தீ வைத்து எரித்துள்ளனர்.

ஆள் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து உடனடியாக தங்களது வண்டியை எடுத்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். சிவந்திபட்டி கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதல் கட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு தீ வைத்து எரிக்கப்பட்ட கழிவுகள் மருத்துவ கழிவுகளாக இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிவந்திப்பட்டி காவல்துறையினர் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை சீர்கெடுப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவந்திபட்டி பகுதியைச் சார்ந்த மக்கள் மருத்துவ கழிவுகள் எரிக்கப்பட்டதாக பரவிய தகவலின் அடிப்படையில் அச்சமடைந்திருக்க கூடிய நிலையும் இருக்கிறது.
இதையும் படிங்க: நெல்லை தொகுதியில் களமிறங்கும் அதிமுக..! பாஜக விட்டுக் கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!