கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி ரோகின. இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ள நிலையில் ராஜேஷின் தந்தை சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது, ராஜேஷ் மற்றும் ரோகிணி இருவரும் ரயிலில் உள்ள கழிவறைக்கு செல்வதாக சென்றுள்ளனர். பின்னர் ராஜேஷ் மட்டும் இருக்கைக்கு திரும்பிய போது வெகு நேரம் ஆகியும் ரோகிணி இருக்கைக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் ராஜேஷ் இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்க்கு புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரோகினியை தேடி வந்த நிலையில், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரோகினி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது,
இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் சரசரவென சரியும் எடப்பாடி பழனிசாமி மவுசு... ராமநாதபுரம் முக்குலத்தோர் ரவுசு...!
அதனை தொடர்ந்து ரோகினியின் உடலை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
மேலும் மாமனாரை காண சென்ற மருமகள் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வாகன ஓட்டிகளே ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றம் - தப்பித்தவறிக்கூட அந்த பக்கம் போயிடாதீங்க...!