சிவகாசி அருகே யுள்ள திருத்தங்கல் பாண்டியன் நகர் 3-வது தெருவில் வசித்தவர் சார்லஸ் பொன்ரசல் அச்சக பணியாளர்களுக்கான ஒப்பந்ததாரராக யிருந்த சார்லஸ் பொன்ரசலுக்கும், கேரள மாநிலம் மூணாறில் வசித்த டீ எஸ்டேட் தொழிலாளி ஜோதிராஜ் என்பவரின் மகள் சந்தியாவுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு வயதில் பவ்யா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் தனது மகள் சந்தியாவையும், பேத்தி பவ்யா வையும் பார்க்க திருத்தங்கல்லுக்கு வந்திருந்த ஜோதிராஜ் மீண்டும் மூணாறுக்கு செல்ல தனது மருமகன் சார்லஸ் பொன் ரசலுடன் இருசக்கர வாகனத்தில் சிவகாசி பேருந்து நிலையத்திற்கு திருத்தங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். மருமகன் இருசக்கர வாகனத்தை ஒட்டி வர மாமனார் பின்னால் அமர்ந்திருந்த நிலையில், அந்தப் பக்கமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
விபத்தில் சம்பவ இடத்திலேயே மாமனார் ஜோதிராஜ் உயிரிழந்த பட்சத்தில், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது மருமகன் சார்லஸ் பொன்ரசலும் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வாகன விபத்தில் உயிரிழந்த மாமனார் மற்றும் மருமகனின் உடல்களை உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!
சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன விபத்தில் மருமகனும் மாமனாரும் உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தின ரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: ரஷ்யாவில் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 49 பேரின் கதி என்ன..??