நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்து கொலை. கொலையாளியை கைது செய்த வள்ளியூர் போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தாமரைக்குளம் தெற்குத் தெருவில் வசித்து வருபவர் மகராஜன் இவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் (40) என்பவருக்கும் குடிநீர் விநியோகம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊர் பொதுக் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது, இசக்கியப்பன் வீட்டிற்கு மட்டும் தண்ணீர் செல்லாததால், அவர் மகராஜன் வீட்டிற்குச் சென்று தண்ணீர் தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை இசக்கியப்பன் எடுத்து மகராஜனின் நெற்றியில் தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!
பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். காயமடைந்த மகராஜனை அவரது உறவினர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மகராஜன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு இசக்கிபாண்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
இதையும் படிங்க: விருதுநகரை அலறவிட்ட சம்பவம்... ரத்தம் தெறிக்க தெறிக்க இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்...!